search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பி.ஏ.பி.,பாசனத்தில் 3 நாட்கள் மட்டும் தண்ணீர் திறப்பு - சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

    வெள்ளகோயில் பகுதியில் 48,000 ஏக்கர் விவசாய நிலத்தில் பி.ஏ.பி.,நீரை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது.
    உடுமலை:
     
    உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலம் பி.ஏ.பி. பாசன திட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. வெள்ளகோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கடைமடை விவசாயிகளாக உள்ளனர். இவர்களுக்கு பல ஆண்டுகளாகவே உரிய தண்ணீர் வழங்கப்படுவதில்லை. இத்திட்டத்தில் பயன்பெறாத ஆயக்கட்டுதாரர்கள் நடத்தும் தண்ணீர் திருட்டும், முறையான பாசன வினியோகம் இல்லாததும்தான் இதற்கு காரணம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள். 

    இதுகுறித்து வெள்ளகோயில் விவசாயிகள் பலர் தமிழக முதல்வர், தலைமைச்செயலர், அமைச்சர்கள், கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

    வெள்ளகோயில் பகுதியில் 48,000 ஏக்கர் விவசாய நிலத்தில் பி.ஏ.பி. நீரை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது. 7 நாள் திறப்பு, 7 நாள் அடைப்பு என்ற ரீதியில் 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக மாதத்துக்கு 3 நாட்கள் மட்டும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதே ரீதியில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வழங்கும் பட்சத்தில் புன்செய்பயிர் சாகுபடி செய்யப்படுவது கேள்விக்குறியாகிறது. 

    அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 3 டி.எம்.சி. தண்ணீர் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு எடுக்கப்பட வேண்டிய 1,150 கனஅடி தண்ணீர் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது. பி.ஏ.பி. திட்டத்தில் கடைமடை விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். இதை ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் 4-ம் மண்டல பாசனத்துக்குட்பட்ட விவசாயிகளான நாங்கள் வாய்க்காலில் இறங்கி போராடவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×