search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாற்றுப்பண்ணை
    X
    நாற்றுப்பண்ணை

    உடுமலையில் காய்கறிகள் நாற்று உற்பத்தி தீவிரம்

    அரசு தோட்டக்கலைப்பண்ணையில் குறிப்பிட்ட ரக காய்கறி நாற்றுக்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் ஆங்காங்கே தனியார் நாற்றுப்பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் சுமார் 10 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக உள்ளன.

    மேலும் அரசு சார்பில் சங்கராமநல்லூர் பேரூராட்சி மடத்தூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையிலும் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் பசுமைக்குடில் அமைத்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தியில் ஈடுபடுகின்றன.

    நடப்பு பருவத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் தக்காளி, மிளகாய், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி தொடங்கியுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு தனியார் நாற்றுப்பண்ணைகளில் நாற்று உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் நாற்று உற்பத்தி இதுவரை தொடங்கவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    தக்காளி நாற்றுக்களை 22 நாட்களுக்கு மேலும் மற்ற காய்கறிப் பயிர்களை 30 நாட்களுக்கு மேலும் வாங்கிச்சென்று நடவு செய்கின்றனர். தற்போதைய நிலையில் தனியார் நாற்றுப் பண்ணைகளில் அதிக விலை கொடுத்து காய்கறி நாற்றுகளை வாங்கி நடவு செய்கிறோம். 

    அரசு தோட்டக்கலைப்பண்ணையில் குறிப்பிட்ட ரகக் காய்கறி நாற்றுக்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே அனைத்து ரக நாற்றுக்களும் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் உற்பத்தி செய்து தோட்டக்கலைத்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர். இதுகுறித்து அரசு தோட்டக்கலைப் பண்ணை அதிகாரிகள் கூறியதாவது:- 

    இங்கு தக்காளி, மிளகாய், கத்தரி, காலிபிளவர் ஆகிய காய்கறி நாற்றுகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் 38 லட்சம் தக்காளி நாற்றுகள் உள்பட 60 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பப்பாளி, முருங்கை கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்ட பல்வேறு இடர்பாடுகளால் இன்னும் விதைகள் வரவில்லை. விதைகள் வந்ததும் விரைவில் நாற்று உற்பத்தி தொடங்கும் என்றனர்.
    Next Story
    ×