search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்குளியில் சாலை மறியலில் ஈடுபட்டபொதுமக்கள்.
    X
    ஊத்துக்குளியில் சாலை மறியலில் ஈடுபட்டபொதுமக்கள்.

    தடுப்பூசி தட்டுப்பாடு-ஊத்துக்குளியில் பொதுமக்கள் சாலை மறியல்

    தடுப்பூசி போடப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றனர். அப்போதுசிலருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்கவில்லை. இதனால் அதிகாலை முதலே காத்திருந்த பொதுமக்கள் மருத்துவ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊத்துக்குளி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று தடுப்பூசி போடப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனிடையே திருப்பூர் வேலம்பாளையம் தடுப்பூசி மையத்திற்கு 530 கோவிஷீல்டு மற்றும் 110கோவாக்சின்தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இதைத்தொடர்ந்து வேலம்பாளையம் சுற்றுவட்டாரத்தை  சேர்ந்த பெண்கள்  உள்பட  ஏராளமான பொதுமக்கள்  அதிகாலை 2 மணிக்கே  வேலம்பாளையம் தடுப்பூசி மையத்திற்கு வந்து குவிந்தனர். ஆனால் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அதிகாலை முதலே காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் திருமுருகன் பூண்டி, பூமலூர், அவினாசி, உடுமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    Next Story
    ×