search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது

    ஒரே நாளில் 10பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்து 656 பேர் உயிரிழந்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 நாட்களுக்கு முன் 800க்கு மேல் இருந்த தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 76 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 1,968 பேர் தொற்றுக்கான சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்புவோர் எண்ணிக்கை 2 நாட்களாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 64 ஆயிரத்து 685 பேர் குணமடைந்துள்ளனர்.

    கடந்த 5 நாட்களில் தொற்று பாதிப்பு குறைந்து தற்போது 11 ஆயிரத்து 361 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 10பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்து 656 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பரவல் அதிகரித்த போது திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் என மருத்துவ பணியாளர்கள் பலர் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களில்  பலர் தேவையற்ற விடுப்பை தவிர்த்து முறையாக பணிக்கு வருகை புரிந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறையினர் கூறுகை யில், தீவிர சிகிச்சையில் உள்ளோர், டாக்டர்கள் நேரடியாக கண்காணிப்பில் உள்ளனர். இதனால் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரை குணமடைய செய்யும் வகையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலர் தேவையின்றி விடுப்பு எடுப்பதை தவிர்த்துள்ளனர் என்றனர். 
    Next Story
    ×