search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் காயவைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம்.
    X
    சாலையில் காயவைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம்.

    சாலையில் காய வைக்கப்படும் மக்காச்சோளம்

    காயவைக்கும் தானியங்களை பாதுகாக்க இரவு நேரங்களில் விவசாயிகள் சாலையின் ஓரம் படுத்து உறங்குவதில் சிரமம் உள்ளது.
    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காச்சோளம் முக்கிய பயிராக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. முற்றிய கதிர்களை அறுவடை செய்த பின்பு எந்திரம் பயன்படுத்தி தானியம் பிரித்து எடுக்கப்படுகிறது. இதற்குப்பின்பு சூரிய ஒளியில் நன்றாக உலர்த்திய பிறகே எடையிட்டு விற்பனை செய்ய முடியும்.

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை காய வைக்க போதிய உலர்களங்கள் இல்லை. இதனால் சாலையில் தானியங்கள் உலர்த்தப்படுகிறது. 

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பல டன் எடையுள்ள மக்காச்சோளத்தை மூட்டைகளாக்கி பல கிலோ மீட்டர் தொலைவு எடுத்து வந்து போக்குவரத்து குறைவாக உள்ள சாலைகளில்  கொட்டி உலர வைக்கிறோம். இப்படி காய வைக்கும் தானியங்களை பாதுகாக்க இரவு நேரங்களில் விவசாயிகள் சாலையின் ஓரம் படுத்து உறங்குவதில் சிரமம் உள்ளது. 

    காய்ந்த பின்பு மீண்டும் மூட்டைகளில் சேமித்து எடுத்துச்செல்ல வேண்டும். இதுபோல் பல சிரமங்கள் உள்ளன. போதிய உலர்களங்கள் இல்லாத காரணத்தால் விவசாயிகள் மிகவும் அவதிபடுகின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு உற்பத்தியாகும் தானியங்களை உலர வைக்கும் அளவில் போதிய அளவு உலர்களங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×