search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா அறிகுறி உள்ளவர்களா..?-தகவல் தெரிவிக்க மருந்தகங்களுக்கு உத்தரவு

    தொற்று பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான தருணத்தில் சிகிச்சை அளித்தால் இறப்பு விகிதத்தை முற்றிலும் குறைக்க முடியும்.
    உடுமலை:

    உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள மருந்துக்கடைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு  கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகள் குறித்து நகராட்சிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக உடுமலை நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பாதிப்பு அறிகுறிகளாக காய்ச்சல், சளி, தும்மல், வயிற்றுப்போக்கு ஆகியன உள்ளன. தற்போதைய ஆய்வு மற்றும் அரசு வழிகாட்டுதல்களின்படி தொற்று பாதித்து ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான தருணத்தில் சிகிச்சை அளித்தால் இறப்பு விகிதத்தை முற்றிலும் குறைக்க முடியும்.பொதுமக்கள் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருந்தகங்களுக்கு செல்கின்றனர்.

    திருத்திய மருந்து சட்டத்தின்படி டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் கொடுக்கக்கூடாது. உடனடியாக நகராட்சி சுகாதாரத்துறைக்கு முழு முகவரி பெற்று தகவல் தர வேண்டும்.அதே போல் தனியார் மருத்துவமனைகளுக்குகாய்ச்சல், இருமல், தும்மல், சளி, உடல்சோர்வு, வயிற்றுப்போக்கு, நுகரும் தன்மை குறைவு, சுவை தெரியாமல் இருப்பது போன்ற கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளை தொற்று காலத்தில் சந்தேகத்திற்குரிய நபராக கருதி உடனடியாக நகராட்சி சுகாதாரப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இதற்காக உடுமலை நகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில், வரிசை எண், நோயாளி பெயர், பாலினம், முகவரி, மொபைல் எண், சிகிச்சைக்கு வந்த தேதி ஆகியவற்றுடன் கூடிய படிவத்தை பூர்த்தி செய்து mho.udumalaipet@gmail.com  என்ற இ-.மெயில் முகவரிக்கோ, 90809 20233 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அனுப்பி வைக்க வேண்டும்.பெருந்தொற்று பரவாமல் தடுக்கவும், பாதிப்புகளை குறைக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

    Next Story
    ×