search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டுகோள்

    கொரோனா நோய் தொற்று சூழலில் மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் போடுவதால், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை விதிகளை பின்பற்றி பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    சுற்றுச்சூழல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு அமைச்சகம் மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து சுத்திகரித்து அகற்றுவதற்காக மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை 2016ல் அறிவித்துள்ளது.விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைக்க முடியும்.மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை பொது கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

    தொற்று ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமிக்க கூடாது. மாசுகட்டுப்பாடு வாரியம் மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற அனைத்து மருத்துவமனை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறைக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. சாலை,ஆற்றோரம், நீர் நிலை, மக்கள் பயன்பாடு இல்லாத பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதாக புகார்கள் வருகின்றன. தற்போது நிலவும் கொரோனா நோய் தொற்று சூழலில் மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் போடுவதால், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

    அனைத்து மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உருவாகும் மருத்துவ கழிவுகளை முறையாக பிரிக்க வேண்டும்.அதனை மாசுகட்டுப்பாடு வாரியம் அனுமதித்துள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×