search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைதளங்கள்
    X
    சமூக வலைதளங்கள்

    சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்-மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

    சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆலோசனை பெறவும், காய்கறி விற்பனை வாகனங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கவும் கீழ்க்கண்ட போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பிரதான கட்டுப்பாட்டு அறையை-0421 2237 852 என்ற போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆலோசனை பெற டெலிகவுன்சிலிங் சென்டர்-1 மற்றும் 2 வது மண்டலத்திற்கு-0421 2321 520.3 மற்றும் 4 வது மண்டலத்திற்கு-0421-2321 500. காய்கறி விற்பனை வாகனம் குறித்த புகாருக்கு-0421-297 1192 ஆகிய போன் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் கமிஷனர் இ-மெயில் முகவரி-commr.tiruppur@tn.gov.in மற்றும் சமூக வலைதளங்களான Tiruppur Corporation Official , https://www.facebook.com/tiruppurcorp/ டிவிட்டர் https://twitter.com/tiruppurcorp, https:/ www.instagram.com/tiruppurcorp/ இணைய தளம் - www.tnurbantree.tn.gov.in/tiruppur/ ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×