search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பன் கடலில் உள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியான தூக்குப்பாலத்தை படத்தில் காணலாம்.
    X
    பாம்பன் கடலில் உள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியான தூக்குப்பாலத்தை படத்தில் காணலாம்.

    பாம்பன் தூக்குப்பாலத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு - பயணிகளுடன் மண்டபம் வரை ரெயில்கள் இயக்கம்

    பாம்பன் தூக்குப்பாலத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுடன் மண்டபம் வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் இணைக்கிறது.

    இந்த ரெயில் பாலம் அமைத்து 105 ஆண்டுகளை கடந்து, பழமையாகிவிட்டதால் அந்த ெரயில் பாலத்தில் இயக்கப்படும் அனைத்து ெரயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

    ெரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் வழியாக ெரயில்கள் செல்லும்போது தூக்குப்பாலத்தில் ஏதேனும் அதிர்வு ஏற்படுகி்றதா என்பதை ஆய்வு செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, சென்னை ஐ.ஐ.டி. குழு மூலம் தூக்குப்பாலத்தில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் தூக்குப்பாலம் வழியாக ரெயில் கடந்து செல்லும் போது, சென்சார் கருவிகள் மூலம் தூக்கு பாலத்தில் ஏற்படும் அதிர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் கோவையில் இருந்து நேற்று அதி காலை 2 ெரயில்கள் அடுத்தடுத்து பாம்பன் ெரயில் பாலம் வழியாக தூக்குப்பாலத்தை கடந்து ராமேசுவரம் சென்றன. அப்போது ெரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் வழக்கத்தைவிட திடீரென அதிர்வுகள் அதிகமாக இருப்பது சென்சார் கருவி மூலம் தெரியவந்தது. தொடர்ந்து மதுரை ெரயில்வே கோட்ட பொறியாளர் கிரிஸ்குமார் தலைமையில் ெரயில்வே பொறியாளர்கள் குழுவினர் நேற்று பாம்பன் ெரயில் தூக்குப்பாலத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்தனர். அப்போது தூக்குப்பாலத்தில் ஒரு இடத்தில் சென்சார் கருவியில் பழுது ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதுபற்றி ெரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாம்பன் ெரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் பல இடங்களில் சென்சார் கருவிகள் ஐ.ஐ.டி. மூலம் பொருத்தப்பட்டு உள்ளன. தூக்குப்பாலம் வழியாக ெரயில்கள் செல்லும்போது எந்த ஒரு பாதிப்பு என்றாலும் உடனடியாக தெரிந்துவிடும்.

    இந்தநிலையில் சென்னை ெரயிலானது தூக்குப்பாலத்தை கடந்து சென்ற போது வழக்கத்தைவிட பாலத்தில் அதிக அதிர்வுகள் இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து ஆய்வு செய்ததில் தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தூக்குப்பாலத்தில் என்ன பாதிப்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தற்காலிகமாக பாம்பன் ெரயில் பாலத்தில் பயணிகளுடன் ெரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. குழுவினர் மீண்டும் பாம்பன் தூக்குப்பாலத்தை ஆய்வு செய்ய உள்ளனர். பழுதான சென்சார் கருவி சரிசெய்யப்பட்டு அதன்பின்னர் மீண்டும் ெரயில் பாலம் வழியாக பயணிகளுடன் ெரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். அதுவரையிலும் பயணிகளுடன் பாம்பன் ெரயில் பாலத்தில் ெரயில் போக்குவரத்து நடைபெறாது.

    ராமேசுவரம் வரும் அனைத்து ெரயில்களும் மண்டபம் ெரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து பயணிகள் அரசு பஸ்கள் மூலமாக ராமேசுவரத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று திருச்சியில் இருந்து ராமேசுவரம் வந்த ெரயில் மண்டபம் ெரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. மீண்டும் மண்டபத்தில் இருந்தே திருச்சிக்கு அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்படும் சேது எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை ெரயில்கள் பயணிகள் இல்லாமல் காலிபெட்டிகளுடன் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு, பாம்பன் ெரயில் பாலம் வழியாக இயக்கப்பட்டு மண்டபம் வந்து சேர்ந்தன. அங்கிருந்து ராமேசுவரம் பயணிகள் ஏறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    Next Story
    ×