search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் சென்ற விஜின் நிலைதடுமாறி கீழே விழும் கண்காணிப்பு கேமரா காட்சி.
    X
    மோட்டார் சைக்கிளில் சென்ற விஜின் நிலைதடுமாறி கீழே விழும் கண்காணிப்பு கேமரா காட்சி.

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    பத்மநாபபுரம்:

    தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் விஜின் (வயது30), கொத்தனார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் வரன் பார்த்து வந்தனர். இந்தநிலையில் விஜின் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டார். புலிப்பனம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

    அப்போது எதிர்பாராதவிதமாக விஜின் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் விஜின் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், விஜின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து விஜினின் உடலை தக்கலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
    Next Story
    ×