search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்பாடு பகுதியில் தகரங்கள் அகற்றப்பட்ட காட்சி.
    X
    கட்டுப்பாடு பகுதியில் தகரங்கள் அகற்றப்பட்ட காட்சி.

    கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு-கட்டுப்பாடு பகுதிகள் குறைப்பு

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 646 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 12,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி மாவட்டத்தில் தொற்று சிகிச்சை முடிந்து நேற்று 2,377 பேர் வீடு திரும்பினர். இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். 

    மேலும் நேற்று புதிதாக 728 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தின் கொரோனா மொத்த பாதிப்பு 76,101 ஆக உள்ளது.இதுவரை 62,717 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 4 நாட்களில் 7,977 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    நேற்று 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 646 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 12,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனிடையே திருப்பூர் மாநகர் பகுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த வாரம் மாநகர் பகுதியில் தினசரி பாதிப்பு 300ஆக இருந்தது. தற்போது 130ஆக குறைந்துள்ளது. அதுபோல் தினசரி இறப்பு வீதம் 7ஆக இருந்த நிலையில் தற்போது 2ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 500 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 200பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    கடந்த வாரம் மாநகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 77 இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 43ஆக குறைந்துள்ளது. இது பொதுமக்கள், அதிகாரிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×