search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் நிறுத்தம்-தாசில்தாரிடம் பரபரப்பு புகார்

    அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் அத்திக்கடவு-திட்ட பணிக்கான குழாய் பதிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
    அவிநாசி:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அவிநாசி -அத்திக்கடவு குடிநீர் திட்டம் ரூ.1652 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்காக பவானி, பெருந்துறை-நல்லகவுண்டம்பாளையம், பெருந்துறை, திருவாச்சி கிராமம், குன்னத்தூர், புலநாயன்பாளையம், நம்பியூர், வரப்பாளையம், அன்னூர், குன்னத்தூராம்பாளையம் ஆகிய பகுதிகளில் 6 நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த மாதம் கருமாபாளையம் பகுதியில் பணி முடிவடைந்து தற்போது செம்பகவுண்டம்பாளையம் வழியாக அவிநாசி, மடத்துப்பாளையம் வரை குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனிடையே ஒரு தரப்பினர் மாற்று தடத்தில் குழாய் பதிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்ததால் திடீரென அப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்டக்குழுவினர் வேதனையடைந்துள்ளனர்.இருப்பினும் உரிய ஆய்வு மேற்கொண்டு ஓரிரு நாட்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் அவிநாசி புதுப்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் சிலர் அவிநாசி தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர். அதில், அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிக்கான குழாய் பதிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சேவூர், கருமாபாளையம் முதல் செம்பகவுண்டம்பாளையம் வழியாக மடத்துப்பாளையம் சாலையில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு ஆட்சேபனை தெரிவித்து அப்பகுதியில் உள்ள தனி நபர் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார். 3 மாவட்டங்களில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. தற்போது குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×