search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேருந்துகள்
    X
    பேருந்துகள்

    27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்

    கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை மாவட்டத்திற்குள் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கிறது. நேற்றில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் அதிகமான ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் குறைவாக உள்ளது.

    27 மாவட்டங்களில் டாஸ்மாக், தேநீர் கடைகள் திறந்த நிலையில் இந்த வார இறுதிக்குள் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

    இதனால் போக்குவரத்து கழகங்கள் 50 சதவீத பேருந்துகளை இயக்கும் வகையில் ஆயத்தமாகி வருகின்றன. அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதும் அரசு பேருந்துகள் இயங்கும். இந்த பேருந்து சேவை மாவட்டத்திற்குள்ளேயே இயங்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×