search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவையில் ஒரே நாளில் 1,728 பேருக்கு கொரோனா - 27 பேர் பலி

    கொரோனாவில் இருந்து 1 லட்சத்து 86 ஆயிரத்து 852 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 16 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகளவு இருந்தது. கடந்த மாதம் இதே வேளையில் கொரோனா உச்சத்தில் இருந்தது. அதன் வேரை அறுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் தீவிரமாக மேற்கொண்ட தால் கொரோனா தாக்கம் குறைந்தது. இதனால் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அத்துடன் குணமடைந்து வீடுதிரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.இந்தநிலையில் நேற்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,728 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 269 ஆக உயர்ந்தது. கோவையில் கொரோனா தொற்று குறைந்து வருவது மக்களை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது.

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்ட 2,664 பேர் நேற்று ஒரேநாளில் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இதுவரை கொரோனாவில் இருந்து 1 லட்சத்து 86 ஆயிரத்து 852 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 16 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அத்துடன் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 27 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,762 ஆக உயர்ந்தது. தினசரி பலி எண்ணிக்கையில் செங்கல்பட்டு (33 பேர் பலி), சென்னைக்கு (28) அடுத்த இடத்தில் கோவை (27) உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 380 பேருக்கு வைரஸ் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 938 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 510 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 ஆயிரத்து 331 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுதவிர தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3 ஆயிரத்து 470 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில் மொத்தம் உள்ள 341 ஆக்சிஜன் படுக்கைகளில் 252 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 89 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
    Next Story
    ×