search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்புக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்

    தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்புக்கு அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    சென்னை:

    கொரோனா ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர ஏனைய 27 மாவட்டங்களிலும் 18 விதமான கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுக்கடைகள் திறப்புக்கு அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    கோப்புபடம்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    குடித்து பழகியவர்களுக்கும், விற்று பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்-அமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

    Next Story
    ×