search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடிநீர் குழாய் இணைப்பு பணி-ஊராட்சிகளுக்கு திடீர் சிக்கல்

    ஜல் ஜீவன் திட்டத்தின் நிதியை கையாள இணைய வழி மூலம் பிரத்யேக கணக்கு துவக்கப்பட்டது.
    அவிநாசி:
     
    மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் வரும் 2025க்குள் குடிநீர் இணைப்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மிகச்சிறிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி துவங்கியது.
     
    இதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, கிணறு, குடிநீர் குழாய் இணைப்பு போன்ற கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த திட்டத்தின் நிதியை கையாள இணைய வழி மூலம் பிரத்யேக கணக்கு துவக்கப்பட்டது. இதில் அரசு சார்பில் செலுத்தப்படும் தொகையை ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மட்டுமே கையாளும் வகையில் ரகசிய கோடு எண் வழங்கப்பட்டிருந்தது.தொழில்நுட்ப பிரச்சனையால் இதில் இருந்து தொகையை எடுக்க முடியவில்லை. பணிக்குரிய தொகையை விடுவிக்க காண்டிராக்டர்கள் ஊராட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஊராட்சி நிர்வாகங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.  

    இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறுகையில், 

    தொழில்நுட்ப செயல்பாடுகள், சென்னையை மையமாக வைத்தே நடப்பதால் அங்கு தான் பிரச்சினை களையப்பட வேண்டும் என்றனர்.
    Next Story
    ×