search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்து வரும் கொரோனா தொற்று

    சிறுமுகை மற்றும் காரமடை பேரூராட்சி பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் கடந்த வாரங்களில் தினசரி கொரோனா தொற்று 150-க்கும் அதிகமான எண்ணிக்கையில் பதிவாகி வந்தது.

    தற்போது அரசு, மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 50-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. காரமடை ஊராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் 44 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி இருந்தது.

    ஆனால் நேற்றைய தினம் 25 பேருக்கு மட்டுமே கொரோனா பதிவாகி உள்ளது.

    இதில் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர், வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி, பெள்ளாதி, சிக்கரம்பாளையம், மூடுதுறை ஆகிய 6 ஊராட்சி கிராம பகுதிகளில் ஒருவர் கூட கொரோனா பாதிப்புக்கு ஆளாகவில்லை. தோலம்பாளையம், ஓடந்துறை, நெல்லித்துறை, சிகரம்பாளையம், ஜடையம்பாளையம், இலுப்பநத்தம் இரும்பரை, சின்ன கள்ளிபட்டி ஆகிய 8 ஊராட்சி கிராமப்பகுதிகளில் இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் சிறுமுகை மற்றும் காரமடை பேரூராட்சி பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

    காரமடை பேரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று 9 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகியுள்ளது. அதேபோல் சிறுமுகை பேரூராட்சி பகுதியிலும் கடந்த இரு நாட்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

    தொடர்ந்து காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்து வரும் தொற்று காரணமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×