search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்த கூடுதல் கட்டுப்பாடு

    வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்கிறோம் என அனுமதி பெற்ற நோயாளிகள் வீட்டில் இருக்காமல் கடைகளுக்கு செல்வது, நண்பர்களுடன் சுற்றி திரிவது போன்றவற்றில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது.

    கோவை மாநகராட்சி பகுதியில் வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி சமூக நலக்கூடம், கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்படுகிறது.

    புறநகர் பகுதிகளில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைகள், சோமனூர், அரிசிபாளையம், பூலுவப்பட்டி, ஆனைமலை, கஞ்சம்பட்டி, நெகமம், நல்லட்டி பாளையம், தாளியூர், பொங்கலூர், கோவில்பாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளை வகைப்படுத்தும் மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    கொரோனா பரிசோதனை

    கொரோனா தொற்று உறுதியானர்வகள் முதலில் இங்கு தான் அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு சென்றதும், அவர்களில், அறிகுறி உள்ளவர்கள், இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, தீவிர பாதிப்பு உள்ளவர்கள் என வகைப்படுத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை மையங்கள், மருத்துவ மனைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படும்.

    இதையும் படியுங்கள்.... கோவையில் 10 நாளில் கொரோனா முழுமையாக குறையும்- சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்

    அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள், வீடுகளில் தனி அறை உள்ளவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    அப்படி வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்கிறோம் என அனுமதி பெற்ற நோயாளிகள் வீட்டில் இருக்காமல் கடைகளுக்கு செல்வது, நண்பர்களுடன் சுற்றி திரிவது போன்றவற்றில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இப்படி செல்பவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. எனவே குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இனி அத்தியாவசிய தேவைப்படுவோர் தவிர, மற்றவர்களுக்கு இனி வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி வழங்க கூடாது என வகைப்படுத்துதல் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வீட்டில் குழந்தைகள் உள்ள பெற்றோர், வயதான பெற்றோரை பார்த்து கொள்ள ஆட்கள் வேண்டும் என்ற சூழல் உள்ளவர்களுக்கு மட்டுமே இனி வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படும். வலுவான காரணங்கள் இல்லாமல் இனி நோயாளிகளுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படாது.

    தினசரி தொற்று உறுதியாகும் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால், கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கைகள் காலியாக உள்ளன. எனவே வீடுகளுக்கு பதில் நோயாளிகள் அங்கு அனுப்பி வைக்கப்படுவர். இதனால் தொற்று மேலும் குறையும் என்றனர்.

    Next Story
    ×