search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் எல்.முருகன்
    X
    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் எல்.முருகன்

    டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு- பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

    சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செய்லபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படவேண்டும் என தமிழக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்வார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் இன்று அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பாஜக தலைமையகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்

    சென்னையில் உள்ள பாஜக தலைமையகமாக கமலாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 
    டாஸ்மாக்
     கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். 


    பின்னர் இப்போராட்டம் குறித்து பேசிய எல்.முருகன், தமிழகத்தில் டீக்கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
    Next Story
    ×