search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவிலில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்

    கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் மடப்பள்ளிக்கு செல்லக்கூடிய வடக்கு வாசல் கதவை கம்பியால் திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி விஜயமங்கலம் ரோடு, நடுப்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருவேங்கட ஸ்ரீனிவாசா பெருமாள் கோவில் உள்ளது. 

    தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. சம்பவத்தன்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் மடப்பள்ளிக்கு செல்லக்கூடிய வடக்கு வாசல் கதவை கம்பியால் திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

    தொடர்ந்து உட்புறம் உள்ள கோவிலின் பெரிய கதவை திறக்க முயன்ற போது கோவிலில் திருட்டு முயற்சியை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்து தப்பியோடினர். 

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×