search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உள்ள உண்டியல்கள் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. 83 நாட்களுக்கு பின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    மணவாளக்குறிச்சி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதில் கோவிலின் முன் வைக்கப்பட்டிருந்த ஒரு நிரந்தர உண்டியல் மற்றும் 7 குடங்களில் உள்ள காணிக்கை பணம் அனைத்தும் நனைந்தது.

    ஆகவே இந்த உண்டியல்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில் குமார், ஆய்வாளர் கோபாலன் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    அதில் பணமாக ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்து 485 மற்றும் 23.600 கிராம் தங்கம், 52 கிராம் வெள்ளி ஆகியவை வருமானமாக கிடைத்துள்ளன. 83 நாட்களுக்கு பின் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×