search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 97.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.64 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.
     
    அந்த வகையில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு, பெட்ரோல், டீசல் விலை பயணித்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96-ஐ கடந்தும், டீசல் கடந்த 1-ம் தேதி ரூ.90-ஐ கடந்தும் விற்பனை ஆனது. அதன் தொடர்ச்சியாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வந்தது.

    சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.43 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 91.64 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
    Next Story
    ×