search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.முருகன்
    X
    எல்.முருகன்

    டாஸ்மாக் கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்? -எல்.முருகன் கேள்வி

    மதுக்கடைகள் திறப்பதை பெண்கள் எதிர்ப்பதை தமிழக முதல்வர் உணரவேண்டும் என்று எல்.முருகன் கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    டாஸ்மாக் கடை

    இதுபற்றி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், கடந்த ஆண்டு நோய்த்தொற்றின்போது டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என திமுக போராடிவிட்டு இப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

    மதுக்கடைகள் திறப்பதை பெண்கள் எதிர்ப்பதை தமிழக முதல்வர் உணரவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். 
    Next Story
    ×