search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இ-சேவை
    X
    இ-சேவை

    இ-சேவை மையம் தொடக்கம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

    ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு 30 சதவீதம் பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    உடுமலை:

    அரசு உதவித்தொகை, வருவாய், ஜாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு  ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வகையில் தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ஆதார் அட்டை பெறுதல், அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பயன்களை பெற்று வந்தனர்.

    இந்தநிலையில் கொரோனா 2-வது அலையின் காரணமாக இ-சேவை மையங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற முடியாமல் தவித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு 30 சதவீதம் பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டதால் உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள ஆதார் மையம் மற்றும் இ-சேவை மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    முகக்கவசம், தனிமனித இடைவெளி பராமரித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளுடன் இரு மையங்களிலும் தலா ஒரு ஊழியர் மட்டும் பணியில் உள்ளார். அவசர தேவைக்கான விண்ணப்பங்கள் மட்டும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×