search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திக்குட்டை பகுதியில் தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளதை காணலாம்
    X
    அத்திக்குட்டை பகுதியில் தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளதை காணலாம்

    கோவை அருகே ஒரே பகுதியில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    அத்திக்குட்டையில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. எனவே அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு இரும்புதகரத்தால் அடைக்கப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு இரும்பு தகரம் வைத்து அடைக்கப்படுகிறது. அங்கு கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தூவப்படுகிறது.

    இந்த நிலையில் கோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதையடுத்து அவினாசி ரோட்டையொட்டி அத்திக்குட்டை பகுதிக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் 500 மீட்டர் நீளத்துக்கு இரும்புதகரம் வைத்து அடைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில், சாலையோரம் அத்திக்குட்டை பகுதி தகரம் வைத்து அடைக்கப்பட்டு உள்ளதை பகுதி முழுவதையும் மோட்டார் சைக்கிளில் சென்றபடி ஒருவர் படம் பிடித்துள்ளது பதிவாகி இருக்கிறது.

    மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, அத்திக்குட்டையில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. எனவே அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு இரும்புதகரத்தால் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
    Next Story
    ×