search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 472 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் 991 பேர் நேற்று கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 32 ஆயிரத்து 215 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
    நாமக்கல்:

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரது பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,995 ஆக உயர்ந்தது.

    இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மேலும் 472 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 467 ஆக அதிகரித்து உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் 991 பேர் நேற்று கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 32 ஆயிரத்து 215 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 5 ஆயிரத்து 916 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 326 பேர் பலியாகி இருந்தனர்.

    நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த உலகப்பம்பாளையம், நல்லிபாளையம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம், நாமக்கல், ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 10 பேர் இறந்தனர். எனவே பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 336 ஆக அதிகரித்து உள்ளது.
    Next Story
    ×