search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜநாகபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்த காட்சி.
    X
    ராஜநாகபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்த காட்சி.

    ஏ.டி.எம்., எந்திரத்தில் பதுங்கியிருந்த பாம்பு

    பணம் தீர்ந்ததால் வங்கி பணியாளர்கள் பணத்தை நிரப்புவதற்காக ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பார்க் ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து செல்கின்றனர்.

    பொதுமக்களின் தேவைக்குஏற்ப வங்கி சார்பில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பப்பட்டு வந்தது. இன்று காலை பணம் தீர்ந்ததால் வங்கி பணியாளர்கள் பணத்தை நிரப்புவதற்காக ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர்.

    பணத்தை உள்ளே வைக்க ஏ.டி.எம்.எந்திரத்தை திறந்த போது திடீரென உள்ளே இருந்து 3 அடி நீள ராஜநாகபாம்பு வெளியே வந்தது. இதனைப்பார்த்த வங்கி பணியாளர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் அங்கிருந்து அலறியடித்தப்படி ஓடினர்.

    மேலும் இதுகுறித்து உடனடியாக தாராபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறை ஊழியர்கள் ராஜநாக பாம்பை காட்டுப்பகுதியில் விட்டனர்.

    ஊரடங்கு காரணமாக கடந்த  சில நாட்களாக  பொதுமக்கள் ஏ.டி.எம்.மையத்தை பயன்படுத்தாமல் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் பாம்பு  ஏ.டி.எம். எந்திரத்திற்குள் புகுந்து இருக்கலாம் என தெரிகிறது.
    Next Story
    ×