search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    வீடு வீடாக காய்கறிகள் விற்கும் உழவர்சந்தை விவசாயிகள்

    வீடு, வீடாக கொண்டு சென்று காய்கறி விற்பனை செய்வதால் இல்லத்தரசிகளின் மனநிலையை விவசாயிகள் நேரடியாக புரிந்து கொள்கின்றனர்.
    திருப்பூர்:

    கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் இருந்து சரக்கு ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் மூலம் காய்கறி எடுத்து சென்று விற்பனை செய்ய 865 பேருக்கு ‘பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது.இதில் 24 பேர் உழவர் சந்தைக்கு நேரடியாக காய்கறி கொண்டு வரும் விவசாயிகள்.

    இந்தநிலையில் இவர்கள் வாகனம் மூலம் காய்கறி விற்பனையை தொடங்கியுள்ளனர். வாகனத்தில் மாநகராட்சியின் காய்கறி விற்கும் வாகனம் என்பதற்கு பதில் வேளாண் வணிகம் மற்றும் உழவர் நலத்துறை, உழவர் சந்தை நேரடி விற்பனை என்ற அறிவிப்பை வாகனங்களில் ஒட்டியுள்ளனர். இதுவரை உழவர் சந்தைக்கு மட்டுமே காய்கறி கொண்டு வந்து ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்த விவசாயிகள் தற்போது வீடு, வீடாக கொண்டு சென்று காய்கறி விற்பனை செய்வதால் இல்லத்தரசிகளின் மனநிலையை நேரடியாக புரிந்து கொள்கின்றனர்.

    தொற்று பரவல் உள்ளதால் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வர விவசாயிகள் தயங்கும் நிலையில் மாநகராட்சியின் பாஸ் பெற்று விவசாயிகள் நேரடியாக களமிறங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×