search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ரெயில்கள் மூலம் இதுவரை தமிழகத்துக்கு 3,800 டன் ஆக்சிஜன் வினியோகம் - தெற்கு ரெயில்வே

    56-வது ஆக்சிஜன் ரெயில் ஒடிசா மாநிலம் ரூக்கேலாவில் இருந்து, சென்னை துறைமுகத்துக்கு 6 கண்டெய்னர்கள் மூலம் 126.74 டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.
    சென்னை:

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழக அரசு தெற்கு ரெயில்வேயின் உதவியால், வெளிமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது.

    அந்தவகையில் கடந்த மாதம் 14-ந்தேதி, தமிழகத்து முதல் ஆக்சிஜன் ரெயில் வந்தது. இதையடுத்து தொடர்ந்து, மேற்கு வங்காளம், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரெயில்கள் தண்டையார்பேட்டை, மதுக்கரை, மீளவிட்டான் போன்ற இடங்களுக்கு வருகின்றன.

    இந்தநிலையில், நேற்று 56-வது ஆக்சிஜன் ரெயில் ஒடிசா மாநிலம் ரூக்கேலாவில் இருந்து, சென்னை துறைமுகத்துக்கு 6 கண்டெய்னர்கள் மூலம் 126.74 டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. இதுவரை தமிழகத்துக்கு தெற்கு ரெயில்வே மூலம் 3,800 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேரளா மாநிலத்துக்கு 513.72 டன் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×