search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    நெல்லை மாவட்டத்தில் தொடரும் தட்டுப்பாடு- தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரி உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசு ஆஸ்பத்திரி, நகர்நல மையங்கள் ஆகியவற்றில் மட்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை குறைக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    இதற்காக நெல்லை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட மொத்தம் 83 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

    முதலில் பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டினார்கள். ஆனால் தற்போது அரசு சார்பாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பெருமளவு பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வமாக முன்வந்தனர்.

    இந்தநிலையில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

    தடுப்பூசி முகாம்களும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது நெல்லை அரசு ஆஸ்பத்திரி உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசு ஆஸ்பத்திரி, நகர்நல மையங்கள் ஆகியவற்றில் மட்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் வரை குறைந்த அளவு தடுப்பூசியே இருப்பில் உள்ளதால் குறைந்த அளவிலான தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நேற்று முதல் தடுப்பூசி மருந்துகள் முற்றிலும் காலியானது. புதிதாக தடுப்பூசி வராததால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    விரைவில் அடுத்த கட்டமாக தடுப்பூசி மருந்துகள் வந்ததும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    ஆனாலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி உள்பட தடுப்பூசி போடும் மையங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று, காத்து நின்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

    Next Story
    ×