search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,040-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரத்தில் பவுனுக்கு ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 960-க்கு விற்றது. 

    இந்த நிலையில் தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 40-க்கு விற்றது.

    ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 630&ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.76 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.76.10 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×