search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாவட்டத்தில் கொரோனாவுக்கு இளம்பெண் உள்பட 14 பேர் உயிரிழப்பு

    திருச்சி மாவட்டத்தில் புதிதாக 548 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்தவகையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 62,347 ஆக அதிகரித்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 548 பேருக்கு தொற்று உறுதியானது.

    அந்தவகையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 62,347 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9,326 பேர் சிகிச்ச்சையில் உள்ளனர். குணமடைந்த 1,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 52,335 ஆகும்.

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 29 வயது இளம்பெண் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.அவர்களில் 5 பேர் பெண்கள், 9 பேர் ஆண்கள் ஆவர். இறந்தவர்கள் அனைவரும் 29 வயதுக்கு மேல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன்மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 686 ஆக உயர்ந்தது.

    திருச்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் வீடு திரும்பி வருவதால், படுக்கைகள் அதிக அளவில் காலியாக உள்ளன. தற்போது கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 46 படுக்கைகள், சாதாரண படுக்கைகள் 897 மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 363 என மொத்தம் 1,306 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×