search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    கீழக்கரை அருகே 1000 லிட்டர் கள் பறிமுதல்- 5 பேர் மீது வழக்கு

    கீழக்கரை அருகே 1000 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கீழக்கரை:

    கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபான பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

    மது பானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏர்வாடி பகுதியில் பனங்கள் விற்பனை கடை விரித்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஏர்வாடி ஆதஞ்சேரி பகுதியில் பனை மரக் காட்டுக்குள் கும்பலாக நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஆதஞ்சேரியை சேர்ந்த கற்பகச் செல்வம், இதம்பாடல் ராமு (வயது 43) ஆகியோர் பனங்கள்ளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து 1000 லிட்டர் பனங்கள், ரூ.21,840 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆதஞ்சேரியை சேர்ந்த முருகன், சுதர்சன், சத்யராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×