search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    ராமநாதபுரத்தில் 650 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி வருகை

    தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், 2-வது டோஸ் போடுவோருக்காக 650 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி வந்துள்ளது.

    ராமநாதபுரம்:

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளது.

    தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், 2-வது டோஸ் போடுவோருக்காக 650 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி வந்துள்ளது.

    இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையில் இருந்து வந்து சேருவதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம். நேற்று முதல் மாவட்டத்தில் 2-வது டோஸ் பாக்கி உள்ளவர்களுக்காக முதற் கட்டமாக 650 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி வந்துள்ளது.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 டோஸ் கோவேக்சின், ராமநாதபுரம் நகர் நல மருத்துவமனைகளில் 100 டோஸ், திருப்புல்லாணி, மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 100, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 50, ராமநாதபுரம் கிராமப் புறங்களுக்காக 150 டோஸ் என 650 டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த கோவேக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் போடுவதற்கு தகுதியான 650 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×