search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்மலைக்கிராமத்தில் விவசாயப் பண்ணையில் குடைமிளகாய் பறிக்காமல் செடிகளில் விடப்பட்டுள்ள காட்சி.
    X
    மேல்மலைக்கிராமத்தில் விவசாயப் பண்ணையில் குடைமிளகாய் பறிக்காமல் செடிகளில் விடப்பட்டுள்ள காட்சி.

    கொடைக்கானலில் குடை மிளகாய் விளைச்சல் அதிகரித்தும் விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

    கொடைக்கானல் மலை கிராமங்களில் குடை மிளகாய் விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை பகுதியான கவுஞ்சி கிராமத்தில் முதன் முறையாக சுரேந்தர் என்ற விவசாயி சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பாலித்தீன் கூடாரங்கள் அமைத்து குடை மிளகாய் விவசாயம் செய்துள்ளார்.

    குடை மிளகாய்கள் அதிகப்படியான நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடை காரணமாக பெரு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

    மேலும் பெரும்பாலான நட்சத்திர உணவு விடுதிகள் திறக்காத காரணத்தால் குடை மிளகாய்கள் அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையான குடை மிளகாய் தற்போது 5 ரூபாய்க்கு கூட வாங்கிச் செல்வதற்கு ஆட்கள் இல்லை என அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    எனவே தோட்டக் கலைத்துறையினர் கவனம் செலுத்தி உரிய இழப்பீடாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் மேல்மலைக் கிராமங்களில் குடை மிளகாய் விவசாய உற்பத்தியை அதிகமான அளவில் விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    Next Story
    ×