search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை
    X
    சுகாதாரத்துறை

    வீட்டிலேயே இருங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள்

    திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்காமல் தடுக்க ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே இருக்க வேண்டுமென பொதுமக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் கடந்த மாத நிலவரப்படி 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் இது 48 சதவீதம். அடுத்ததாக ஊராட்சி பகுதிகளில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் (26 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சியில் 20 சதவீதம் பேரும், பேரூராட்சிகளில் 6 சதவீதம் பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி கிராம ஊராட்சிகளில் -62, மாநகராட்சி -36, பேரூராட்சி -14, நகராட்சியில்9 என 121 இடங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தொற்று பாதிப்பு கடந்த 10 நாட்களாக குறைந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தொற்று பாதிப்பு தலை தூக்காமல் தடுக்க வேண்டும்.அதற்கு ஊரடங்கு விதிமுறைகளை மதித்து வீட்டில் இருந்து வெளியே வராமல் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை  தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
    Next Story
    ×