search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்கள்
    X
    மீன்கள்

    நாகர்கோவிலில் மீன் விற்பதற்கு கட்டுப்பாடு- ஆணையர் அறிவிப்பு

    மாநகரப் பகுதிகளில் தனித்து இருக்கும் மீன், இறைச்சி, காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
    நாகர்கோவில்:

    தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி நாகர்கோவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோட்டார் பஜார் பகுதியில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அப்படியே தொடரும். மாநகராட்சி பகுதிகளில் சூப்பர் மார்க்கெட்டில் திறக்க தடை விதிக்க படுகின்றன. தற்போதைய நடைமுறை போல் தொலைபேசி அல்லது வாட்ஸ்-அப் மூலமாக ஆர்டர்களை பெற்று பொருட்களை வினியோகம் செய்யலாம்.

    மாநகரப் பகுதிகளில் தனித்து இருக்கும் மீன், இறைச்சி, காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. தொகுப்பாகவும், வணிக வளாகங்களில் இருக்கும் கடைகள் இயங்க அனுமதி இல்லை. மீன்கள் மொத்த விற்பனை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை அனாதை மடம் பகுதியில் வைத்து நடைபெறும். அதன் பிறகு அங்கு விற்பனையில் ஈடுபட்டால் மீன்கள் அனைத்தும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். அதேவேளையில் நடைமுறையில் இருக்கும் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி, மளிகை, மீன், இறைச்சி விற்பனை மேற்கொள்ள தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இவைத்தவிர இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகள், மின் பொருள் விற்பனையங்கள், பாடநூல் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை நிலையம், ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவையும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×