search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா நோயாளியை சாலையில் இறக்கி விட்டுச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

    சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனத்தில் உள்ள வீட்டுக்கு செல்ல இருந்த கொரோனா நோயாளியை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சாலையில் இறக்கி சென்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை தெருவை சேர்ந்தவர் சின்ராசு (வயது 50). இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சின்ராசு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீட்டின் தெரு முனையில் இறக்கி சாலையோரம் படுக்க வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் ஊழியர் கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து அந்த நோயாளி சாலையில் படுத்துக் கிடந்தார். அப்பொழுது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு திடீர் வலிப்பு வந்ததால் துடித்துக் கொண் டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் கொரோனா நோயாளி என்பதால் அருகில் செல்லவில்லை.

    பின்னர் அவரை அடையாளம் கண்டவர்கள் சின்ராசு வின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் னர் அவரது உறவினர்கள் சின்ராசுவை மாற்று வாகனத் தில் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×