search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருச்சி மாவட்ட கிராமங்களில் கொரோனாவால் 100 நாள் வேலை திட்டப்பணிகள் கடும் பாதிப்பு

    கடந்த மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கிராமப்புறங்களில் தொற்றுகள் அதிகரித்தன. இந்த நிலையில் சுகாதாரத் துறை பார்வை கிராமப்புறங்களுக்கு திரும்பியது.

    திருச்சி:

    தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 61 ஆயிரத்து 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

    கடந்த மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கிராமப்புறங்களில் தொற்றுகள் அதிகரித்தன. இந்த நிலையில் சுகாதாரத் துறை பார்வை கிராமப்புறங்களுக்கு திரும்பியது. பல கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

    இதனால் நூறு நாள் திட்டப்பணியாளர்கள் வேலை இடங்களுக்கு செல்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 100 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்திற்கு 3 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் கடந்த மாதம் பாதி பேர் மட்டுமே வேலைக்கு சென்றனர். இதனால் திட்டப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது நோய் கட்டுக்குள் வந்து இருப்பதால் இந்த மாதம் முதல் 100 நாள் திட்டப்பணிகளில் வேகம் எடுக்கும் என திட்ட இயக்குனர் சங்கர் தெரிவித்தார்.

    Next Story
    ×