search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை  அமைச்சர்கள் தொடங்கி வைத்த காட்சி.
    X
    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்த காட்சி.

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.36 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  படுக்கை வசதிகள் அதிகம் தேவைப்படுவதால் தன்னார்வலர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் உற்பத்திக்கான வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

    இந்தநிலையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில்  ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.36 லட்சத்தில்  ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று  அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    அமைச்சர் சாமிநாதன் கூறும்போது கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலர்கள் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர். மேலும்தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்  என்றார்.
    Next Story
    ×