search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    மது விற்பனையை தடுத்த போலீஸ்காரர் மீது தாக்குதல்

    அவிநாசியில் மது விற்பனையை தடுத்த போலீஸ்காரரை தாக்கிய 4பேரை போலீசார் கைது செய்தனர்.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 53).  இவர் தனது பண்ணை வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பதாக  அவிநாசி மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன், போலீஸ் காரர்கள் விக்ரம், திருவேங்கடம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த  66 மது பாட்டில்களை  போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனிடையே நடராஜன், அவரது மகன் சுதன் (20), மற்றும் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வரும் சட்டாம்பிள்ளை, (32) முத்துசாமி (34) ,லோகேஸ்வரன்(20) ஆகியோர் போலீஸ்காரர் திருவேங்கடத்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜன், சுதன், முத்துசாமி, சட்டாம்பிள்ளை ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான லோகேஸ்வரனை தேடி வருகின்றனர். கைதான 4 பேரும் அவிநாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×