search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பூஞ்சை
    X
    கருப்பு பூஞ்சை

    மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பலி

    திண்டுக்கல்லை சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று உயிரிழந்து இருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கிறது. இது போல் தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் தமிழகத்தில் பரவலாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டு தலின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரையை பொறுத்தமட்டில் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 60 பேர் அறிகுறி களுடன் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் போடிநாயக்கனூரை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

    ஏற்கனவே, திண்டுக்கல்லை சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று உயிரிழந்து இருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    Next Story
    ×