search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவ-மாணவிகள்
    X
    மாணவ-மாணவிகள்

    பிளஸ்-2 தேர்வை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது - மாணவ-மாணவிகள் பேட்டி

    பிளஸ்-2 தேர்வை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாணவ-மாணவிகள் கூறினர்.
    மதுரை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து உசிலம்பட்டியை சேர்ந்த யுபின் கார்க்கி கூறியதாவது:-

    பிளஸ்-2 வகுப்புகள் 2 மாதங்கள் மட்டுமே நடைபெற்றது. மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்களைப் படித்து வந்தோம். அப்படிப் படிப்பது எங்களுக்கு திருப்திகரமாக இல்லை.இந்த சூழ்நிலையில் பிளஸ்- 2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது மகிழ்ச்சியான விஷயமாகும். காரணம் பிளஸ்-2 பொதுத் தேர்வு அழுத்தமில்லாமல் நீட் தேர்வுக்கு எங்களை தயார் படுத்திக்கொள்ள இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே கருதுகிறேன்.

    மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்குவார்கள் என்ற குழப்பம் எங்களுக்கு உள்ளது.அப்படி வழங்கப்படும் மதிப்பெண்கள் மேல் படிப்பிற்கு செல்லும் மாணவர்களை பாதிக்காத வண்ணம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டால் மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.

    வாடிப்பட்டி தனியார் பள்ளி மாணவன் பாலாஜி கூறியதாவது:- கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் பாடம் எடுத்தது சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் இருந்தோம். பாடப் புத்தகத்தை வைத்து படிக்க முடியவில்லை என்ற வேதனை இருந்தது. இந்த நிலையில் தேர்வு நடந்திருந்தால் மிக குறைந்த அளவே மதிப்பெண் பெற்று இருப்போம். தற்போது தேர்வு ரத்தானது மிகமகிழ்ச்சி அளிக்கிறது.

    சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபிக்‌ஷா கூறியதாவது:- அரசு பள்ளியில் படித்து வருகிறேன். எனக்கு தேர்வு எழுதினால் தான் நல்ல மதிப்பெண் கிடைக்கும். நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நல்ல கல்லூரி கிடைக்கும் என்று கூறினார்.

    மதுரை மகபூப்பாளையம் ஆயிஷாசபியா:-பிளஸ்-2 வகுப்பில் வணிகவியல் துறையில் படித்து வந்தேன். தற்போது பொது தேர்விற்காக முழுநேரம் படித்து வந்தேன். இந்த நிலையில் நேற்று திடீரென அரசு, பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் என்போன்ற மாணவ, மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். கொரோனா காலகட்டம் என்பதால் படிப்பை காட்டிலும் மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து அரசு, பொதுத் தேர்வை ரத்து செய்திருக்கிறது. மேலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சரியான முறையில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். உயர் கல்வி படிக்க இந்த மதிப்பெண்கள் மிகவும் முக்கியம் என்பதால் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்மதிப்பெண்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×