search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் ஒன்றியத்தில் 7,266 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், நாமக்கல் ஒன்றியத்தில் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 266 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 35 ஆயிரத்து 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 27 ஆயிரத்து 710 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 7 ஆயிரத்து 533 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 700 முதல் 800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று முன்தினம் நாமக்கல் ஒன்றியத்தில் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 266 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக கொல்லிமலை ஒன்றியத்தில் 155 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கைவருமாறு:-

    நாமக்கல்- 7,266, பள்ளிபாளையம்- 5,708, திருச்செங்கோடு- 5,134, ராசிபுரம்-3,079, எருமபட்டி- 1,934, பரமத்திவேலூர்- 1,656, கபிலர்மலை- 1,550, மோகனூர்- 1,549, எலச்சிபாளையம்- 1,495, புதுச்சத்திரம்- 1,383, நாமகிரிப்பேட்டை- 1,360, சேந்தமங்கலம்- 1,179, மல்லசமுத்திரம்- 1,087, வெண்ணந்தூர்- 1,000, கொல்லிமலை- 155.
    Next Story
    ×