search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    நாமக்கல், பரமத்திவேலூரில் கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

    நாமக்கல், பரமத்திவேலூரில் கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரமத்தி வேலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 2 மளிகை கடைகள் திறந்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதேபோல் போதுப்பட்டி பகுதியிலும் ஊரடங்கை மீறி திறந்து இருந்த ஒரு மளிகை கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம், ஒழுகூர்பட்டியில் அரசு விதிகளை மீறி உணவகம், மளிகை கடைகள், முடி திருத்த கடைகள் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு் ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார், பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் அரசு விதிகளை கடைபிடிக்காமல் செயல்பட்ட ஒரு உணவகத்துக்கு சீல் வைத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மளிகை கடைக்கு சீல் வைத்து ரூ.2 ஆயிரமும், முடி திருத்த கடைக்கு சீல் வைத்து ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தனர்.

    இதேபோல் பரமத்திவேலூர் அருகே ஒழுகூர்பட்டியிலும் அரசு விதிகளை மிறி செயல்பட்ட 2 மளிகை கடைகளுக்கு போலீசார், வேலூர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் ‌சீல் வைத்தனர். மேலும் அவசியம் இல்லாமல் சாலையில் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் அவர்களை எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×