search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    விழுப்புரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அக்னிநட்சத்திர கத்திரிவெயில் முடிந்தபிறகும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100 டிகிரிக்கும்மேல் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம், விழுப்புரம், அரகண்டநல்லூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா கடையம் பகுதியிலும், செஞ்சியை அடுத்த கருங்குழி பகுதியிலும் நேற்று மதியம் 1 மணி அளவில் இடி- மின்னலுடன் பலத்தமழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள 2 தென்னை மரங்களில் இடி தாக்கி தீ பிடித்து எரிந்தன.

    இந்த திடீர் மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×