search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் செல்லம்நகர் பிரிவு பகுதியில் இயங்கிய பனியன் நிறுவனத்திற்கு  சீல் வைத்த காட்சி.
    X
    திருப்பூர் செல்லம்நகர் பிரிவு பகுதியில் இயங்கிய பனியன் நிறுவனத்திற்கு சீல் வைத்த காட்சி.

    திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு சீல்

    திருப்பூரில் ஊரடங்கை மீறி இயங்கிய பனியன் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில்  உள்ள நிலையில் சில பனியன் நிறுவனங்கள் தடையை மீறி இயங்கி வருவதாக  அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையில் தெற்கு தாசில்தார் சுந்தரம் மற்றும் குழுவினர் இடுவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனம் விதிகளை மீறி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அந்த நிறுவனத்திற்கு  சீல் வைக்கப்பட்டது.

    இதேப்போல் பாரப்பாளையம் செல்லம் நகர் பிரிவு பகுதியில் பனியன் நிறுவனம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.மேலும் செட்டிப்பாளையம், கொங்கு மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் இயங்கிய 2 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 4 நிறுவனங் களுக்கும் தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×