search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவையில் 40 மையங்களில் கோவேக்சின் 2-ம் கட்ட தடுப்பூசி இன்று போடப்படுகிறது

    கோவை மாநகரப் பகுதிகளில் 40 சிறப்பு மையங்களில் இன்று கோவேக்சின் 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    கோவைக்கு 5 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றைத் தவிர்க்கும் பொருட்டு, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 40 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மையங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயல்பட உள்ளது. முன்னுரிமைப்படி, 45 வயதிற்கு மேற்பட்ட 100 நபர்களுக்கு மட்டும் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி, காலை 10 மணிக்கு மேல் செலுத்தப்படும். 10 மணிக்கு முன்பாக மக்கள் யாரும் முகாமிற்கு வரவேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் (அடைப்புக்குள் வார்டு எண்கள்) :

    மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கிழக்கு, துடியலூர் (1), மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வெள்ளக்கிணறு (26), மாநகராட்சி ஆரம்ப பள்ளி, அஞ்சுகம் நகர், சின்னவேடம்பட்டி (27), மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சரவணம்பட்டி (28), அரசு உயர்நிலைப்பள்ளி, காந்தி மாநகர் (41), மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.என்.பாளையம் (55), ஜனதா நகர் ஆரம்பப்பள்ளி, சிவானந்தபுரம் (29), மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு (38), மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிஸ மணியகாரம்பாளையம் (41) சின்னவேடம்பட்டி ஆரம்பப்பள்ளி (27, 42).

    கிழக்கு மண்டலம்:- அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன் மாநகர் (32), அரசு மேல்நிலைப்பள்ளி, காளப்பட்டி (33, 34), மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நேரு நகர் (35,36), மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம் (37,56,57), மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உடையாம்பாளையம் (65,66), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர் (60,61), மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் (67,69,75), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர் (63), மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உப்பிலிபாளையம் (64), மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம் (62), மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் (58,59).

    மேற்கு மண்டலம்:- மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தடாகம் சாலை, இடையர்பாளையம் (6), மாநகராட்சி ஆரம்ப பள்ளி, கவுண்டம்பாளையம் (8), மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு (14), மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பி.என்.புதூர் (15), மருதமலை சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான அரசு உதவி மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி (16), மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரகேரளம் (19), மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி (22), எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் (23).

    தெற்கு மண்டலம்:- மாநகராட்சி ஆரம்ப பள்ளி, செல்வபுரம் வடக்கு (76,77,78,79,85), அரசு மேல்நிலைப்பள்ளி பாலக்காடு சாலை, குனியமுத்தூர் (86,87,88,93), அரசு மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம் (89,90,91,92), மாநகராட்சி ஆரம்பப்பள்ளி குறிச்சி (94,95,96,97), கே.வி.கே.நகர் ஆரம்பப்பள்ளி, குறிச்சி (97,98), சித்தன்னபுரம் ஆரம்பப்பள்ளி, குறிச்சி (99,100).

    மத்திய மண்டலம்: மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதபுரம் (54), மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரத்தினபுரி (48), மாநகராட்சி ஆரம்ப பள்ளி, ராமநாதபுரம் (68), மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதூர் (52), மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர் காலனி (83).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
    Next Story
    ×