search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மொரப்பூர் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறிய 40 பேர் மீது வழக்கு

    மொரப்பூர் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறிய 40 பேர் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
    மொரப்பூர்:

    கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி மொரப்பூர் கல்லாவி கூட்ரோடு மற்றும் மொரப்பூர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணி, ஞானப்பிரகாசம், விநாயகமூர்த்தி, முருகன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது ஊரடங்கு விதிகளை மீறி கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இ-பதிவு இல்லாமல் வெளியில் யாரும் வரக்கூடாது. பொதுமக்கள் முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    Next Story
    ×