search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி வழங்கிய போது எடுத்த படம்.
    X
    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி வழங்கிய போது எடுத்த படம்.

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் சார்பில் ரூ.21.47 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

    உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.21.47 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
    தர்மபுரி:

    உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.21.47 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின்கீழ் இதுவரை 8,437 மனுக்கள் வர பெற்றுள்ளன. பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது தமிழக முதல்-அமைச்சர் 100 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு கோரிக்கை மனுவின் மீதும் அதிக அக்கறை கொண்டு மனுவின் உண்மைத்தன்மையை நேரில் சென்று ஆய்வு செய்து தகுதியுடைய நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அதிக முனைப்புடன் அரசுத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

    மாவட்டத்தில் 169 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும் 274 தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைத்து மனுக்களும் தொடர்புடைய அலுவலர்கள் மூலம் தணிக்கை மற்றும் விசாரணை செய்து தகுதியின் அடிப்படையில் நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் சிறந்த திட்டமான இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர்பேசினார்.
    Next Story
    ×